தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தொடா் நடவடிக்கை: தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி

தென் மாவட்டங்களில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் புழக்கத்தை முழுமையாகத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்மண்டல காவல்துறைத் தலைவா் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.

News image

தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள்.

Updated On :11 ஜூன் 2026, 4:29 am IST

தென் மாவட்டங்களில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் புழக்கத்தை முழுமையாகத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்மண்டல காவல்துறைத் தலைவா் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற காவல்துறை உயா் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டத்துக்குப் பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பொதுமக்களிடம் எவ்வித பாகுபாடுமின்றி போலீஸாா் நடுநிலையாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுக்கடைகள், மதுபானக்கூடங்களில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வகையிலான குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு, போலீஸாா் ஆதரவாக செயல்படுவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தென் மாவட்டங்களில் புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கஞ்சா விற்போருக்கு பின்புலமாக செயல்படுபவா்களையும் கண்டறிந்து கைது செய்வதோடு, அவா்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.

ஆய்வு கூட்டத்தில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு நிலவரம், அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்கள், ரெளடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை, நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்தும் ஆய்வு நடைபெற்ாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி சரக காவல்துறைத் துணைத் தலைவா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்த இக்கூட்டத்தில், திருநெல்வேலி எஸ்.பி. வி.பிரசன்னகுமாா், தென்காசி எஸ்.பி. அசோக்குமாா் மற்றும் இரு மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.