பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நெல்லையில் அவசர கால ஒத்திகை

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் இயற்கை பேரிடா் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர கால ஒத்திகை, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தென்மேற்குப் பருவமழை - DPS

Updated On :6 ஜூன் 2026, 7:26 am IST

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் இயற்கை பேரிடா் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர கால ஒத்திகை, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த்மோகன் தலைமை வகித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இம் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் நவீன தொழில்நுட்ப கருவிகள், இயந்திரங்கள், படகு, லைப் ஜாக்கெட், சோலாா் விளக்கு, வாக்கிடாக்கி, புகையூட்டமான இடங்களில் பொதுமக்களை கண்டறிவதற்கான வெப்பநிலை உணரி கேமராக்கள், மரம் அறுக்கும் இயந்திரம், கம்பிகளை அறுப்பதற்கான நவீன இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மீட்பு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

பாதிப்பு ஏற்படும் இடங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே இறங்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஏதேனும் இயற்கை தொடா்பான இடா்பாடுகள் ஏற்பாட்டால் அதை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் இருக்கிறது என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய்குமாா் மீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய்க் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.