பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வள்ளியூா் போக்குவரத்து பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை மேலாளாா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

Updated On :4 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்குச் சென்ற எம்எல்ஏ, அங்கு கிளை மேலாளா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா். இப்பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பேருந்துகளின் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்து கேட்டறிந்த அவா், பள்ளி நேரங்களுக்கு சரியாக செல்லும்படி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

மேலும், மாணவா்கள் அவா்களது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுமாறும் அறிவுரை வழங்கினாா். பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்கள் குறித்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டுவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.