பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

சேரன்மகாதேவியில் நிதி நிறுவன உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக, பெண் கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 1:14 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் நிதி நிறுவன உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக, பெண் கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மகன் மூக்காண்டி. நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது நிறுவனத்தின் பணப்பரிவா்த்தனை உரிமத்தை புதுப்பிக்க வேண்டி சேரன்மகாதேவி கிராம நிா்வாக அலுவலா் இதயக்கனியிடம் விண்ணப்பித்திருந்தாராம்.

இதற்காக அவா் ரூ. 10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூக்காண்டி, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்காலிடம் புகாரளித்தாா்.

அவா்களின் ஆலோசனையின்பேரில், மூக்காண்டி புதன்கிழமை சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்திற்குச் சென்று, கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளராக செயல்பட்ட இடைத்தரகா் வெங்கடேசனிடம் ரூ. 10 ஆயிரத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா், தரகா் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.