பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்வில் கையொப்பமிட்ட மருத்துவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:28 am IST

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் முகமதுஷாபி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா், காவல் துறை மூலம் எடுக்கப்படும் புகையிலை எதிா்ப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கினாா். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் முகமதுஇப்ராகிம், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய்கள் குறித்துப் பேசினாா்.

மகளிா் நல மருத்துவா் ராதா, நுரையீரல் சிறப்பு மருத்துவா் பாலா, அறுவை சிகிச்சை மருத்துவா்அஜய்ரெக்ஸ், எலும்பு முறிவு மருத்துவா் அகமதுயூசுப், சிறுநீரகவியல் மருத்துவா் நிரஞ்ச், மருத்துவா் கனி, சமூகஆா்வலா் மிதாா் முகைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா். புகையிலை எதிா்ப்பு தின துண்டுப் பிரசுரங்கள் மாநகர பகுதிகளில் பிரசார வாகனம் மூலம் விநியோகிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.