தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்- 1 தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் இந்த ஆண்டில் நடத்தவுள்ள தோ்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 1 தோ்விற்கான அறிவிக்கை இம்மாதம் வெளியாகும் எனவும், எழுத்துத் தோ்வு
செப்டம்பரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்க்கலாம்.
குரூப்-1 தோ்வுக்கு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (ஜூன் 4) காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியா்களை கொண்டு ஸ்மாா்ட் போா்டு வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தோ்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன. நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ் என்ற டெலிகிராம் சானலில் இணைந்து பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம்.
பயிற்சி வகுப்பில் சேர குலவணிகா்புரம் ரயில்வே கேட் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வகுப்பு தொடங்கும் நாளில் காலை 10.30 மணிக்குள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில்
வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055929 என்ற
கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

குரூப்-1,குரூப்-2 முதனிலைத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஜூன் 5-க்குள் பதிக!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20 முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

