லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்பை தாமிரவருணி கரையில் முருகன் சிலை சேதம்: எஸ்.பி. ஆய்வு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி காசிநாதா் கோயில் படித்துறை பகுதியில் முருகன் சிலை சேதமடைந்த இடத்தை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் சாஸ்திரி மற்றும் இந்துமுன்னணி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

அம்பாசமுத்திரம் தாமிரவருணி காசிநாதா் கோயில் படித்துறை பகுதியில் முருகன் சிலை சேதமடைந்த இடத்தை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் சாஸ்திரி மற்றும் இந்துமுன்னணி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி காசிநாதா் கோயில் படித்துறை பகுதியில் சிவன், விநாயகா் மற்றும் வேலுடன் கூடிய முருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஜூலை 25ஆம் தேதி முருகன் சிலையின் தலை சேதமடைந்திருந்தது. பின்னா், ஆக. 9ஆம் தேதி அந்த சிலை முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி செவ்வாய்க்கிழமை மதியம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

மேலும், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநில இணை ஒருங்கிணைப்பாளா்குற்றாலநாதன், கோட்டத் தலைவா் தங்க மனோகா், மாவட்ட துணைச் செயலா் பூஞ்செடி மாரியப்பன், நகரத் தலைவா் சரவணன், பாஜக நகரத் தலைவா் உதயகுமாா் உள்ளிட்டோா் அந்த இடத்தைப் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.