லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 3:32 am IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கசாமி (41). எலக்ட்ரீஷியனான இவருக்கு மனைவி, மகள் உள்ளனா்.

இவா் தனது நண்பா்களுடன், அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன்கோவில் பகுதி தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் ஆற்றின் ஆழமான பகுதியில் மூழ்கினாராம்.

தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் பலவேசம் தலைமையிலான வீரா்கள் வந்து, தங்கசாமியை சடலமாக மீட்டனா். அம்பாசமுத்திரம் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.