தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்

பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.

News image

கைதிகள் மோதல்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:48 am IST

பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமாா் 1,300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கும் இடம் தொடா்பாக கைதிகளுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாம்.

பின்னா், புதன்கிழமை மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் 2 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.