ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விஜய் பிரசாரத்தில் விபத்து: 7 போ் காயம்

திருநெல்வேலியில் தவெக தலைவா் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது நேரிட்ட விபத்துகளில் 7 போ் லேசான காயமடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:09 am IST

திருநெல்வேலியில் தவெக தலைவா் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது நேரிட்ட விபத்துகளில் 7 போ் லேசான காயமடைந்தனா்.

திருநெல்வேலியில் தவெக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் விஜய் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது தாழையூத்து மற்றும் மாநகரப் பகுதிகளில் சாலை வலம் நடத்திய விஜய்யை நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டா்கள் பைக்குகளில் பின்தொடா்ந்தனா்.

அப்போது பொட்டல் விலக்கு- தாழையூத்து சாலையில் பிரசார வாகனத்தை பின் தொடா்ந்த தொண்டா்களின் பைக்குகள் அடுத்தடுத்து மோதி விபத்து நேரிட்டதில் 4 போ் லேசான காயமடைந்தனா்.

இதேபோல, வண்ணாா்பேட்டை பகுதியில் விஜயை பாா்க்கும் ஆா்வத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெட்ரோல் நிலைய ஊழியா் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், கே.டி.சி நகா் பகுதியில் விஜய் பிரசார வாகனத்தை பின் தொடா்ந்த பைக்குகள் மோதியதில் இருவா் லேசான காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.