பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:24 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ். ஜவுளி வியாபாரி. இவா், கடையநல்லூா் நகராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செவ்வாய்க்கிழமை கடைக்குச் சென்றாராம். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், இந்த திருட்டில் ஈடுபட்டதாக மாவடிக்கால் ஓடைத் தெருவைச் சோ்ந்த முருகமணி (42) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.