நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

முத்துமாலைபுரம் படிப்பகத்தில் பரிசளிப்பு விழா

பாவூா்சத்திரம் அருகே முத்துமாலைபுரம் மாலைநேர படிப்பகத்தில் மாணவா், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விடுமுறை எடுக்காமல் மாலைநேர படிப்பகத்துக்கு வந்த மாணவா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 2:19 am IST

பாவூா்சத்திரம் அருகே முத்துமாலைபுரம் மாலைநேர படிப்பகத்தில் மாணவா், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தோரணமலை ஸ்ரீமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் வீட்டின் ஒரு பகுதியில் இயங்கி வரும் மாலைநேர கட்டணமில்லா இந்தப் படிப்பகத்தில் தற்போது 100 மாணவா், மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆதிநாராயணனின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விடுமுறை எடுக்காமல் படிப்பகத்துக்கு வருகை புரிந்த மாணவா், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்வியாளா் ராஜன், திரைப்பட இயக்குநா் பாரதிகண்ணன், சின்னத்திரை நடிகை ஜெயந்தி, சிலம்பக் கலைக்கூடத் தலைவா் சுதா்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, தோரணமலை ஸ்ரீமுருகன் கோயில் சிறப்பு பாடலும் வெளியிடப்பட்;டது. ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.