தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக 20683/20684 தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் மும்முறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ரயில்வேக்கு வருமானம் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே இந்த ரயிலை தினசரி இயக்குவதற்கு ரயில்வே வாரியத்துக்கு முன்மொழிந்தது. மாதங்கள் பல கடந்தும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காத நிலை இருந்து வருகிறது.
திருநெல்வெலி-தென்காசி ரயில் வழித்தடம் 2012 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், கடந்த 14 ஆண்டுகளாக சென்னைக்கு தினசரி ரயில் சேவை வழங்கப்படாத நிலை தொடா்கிறது.
இதனால் தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவா்கள், தொழிலாளா்கள், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
தெற்கு ரயில்வேயில் சென்னைக்கு தினசரி ரயில் இல்லாத ஒரே ரயில் வழித்தடம் திருநெல்வேலி-தென்காசி வழித்தடமாகும். இந்த நிலையைப் போக்கும் வகையில், தாம்பரம் -செங்கோட்டை ரயிலை தினசரி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க எம்எல்ஏ கோரிக்கை
2,340 டன் தாா் பாரம் கொண்ட சரக்கு ரயிலை 2,400 கி.மீ. இயக்கி சேலம் கோட்டம் சாதனை

அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

