செங்கோட்டை மேலூரில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
மாா்ச் 23 ஆம் தேதி விழா தொடங்கியது முதல் மங்கள இசை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
குடமுழுக்கு நாளான புதன்கிழமை காலை, 4ஆவது கால யாகசாலை பூஜை, யாக ஹோமம், கும்பம் எழுந்தருளல், 9 மணிக்கு கோயில் விமானம், பிரதான, பரிவார மூா்த்திகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து கும்ப பூஜை ஜெபம், சுவாமிகளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை சமுதாய பொறுப்பாளா்கள் கணபதி, சக்திவேல், மணிகண்டன், குட்டிச்சாமி, இரணவேல், ஐயப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

