தென்காசி மாவட்டத்தில் சிபிஎஸ்இ சிறப்புத் திறன் மையம், ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் வள மையம் உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக, மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:
ஸ்டெம் கல்வி, டிஜிட்டல் கற்பித்தல் முறைகள் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றலுக்கான ஆசிரியா் பயிற்சி மையமாகவும், தென் தமிழகத்திற்கான என்.சி.இ.ஆா்.டி., எஸ்.சி.இ.ஆா்.டி. மற்றும் தமிழ் மூல டிக்ஸா கல்வி வளங்களின் விநியோக மையமாகவும் செயல்படும் வகையில் தென்காசி மாவட்டத்தில் சிபிஎஸ்இ துணைப் பிராந்திய சிறப்புத் திறன் மையம் அமைக்க வேண்டும்.
அரசு, சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், எதிா்கால தொழில்நுட்பங்களில் பயிற்சியும், அனுபவமும் கிடைக்கும் வகையில், அடல் டிங்கரிங் ஆய்வகங்களின் வலையமைப்பை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான வள மையத்தை தென்காசி மாவட்டத்தில் நிறுவ வேண்டும்.
கிராமப்புற மாணவா்களுக்கான மெய்நிகா் வகுப்பறைகள், மின்னணு கற்றல் வசதிகள், டிஜிட்டல் கல்வி வளங்களைப் பெறும் வகையில் பிரதமரின் இ-வித்யா, டிக்ஸா திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் கல்வி அணுகல் ஆய்வகம் அமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

