லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருநெல்வேலி -செங்கோட்டை விரைவு ரயில் மீது கல்வீச்சு

திருநெல்வேலி-செங்கோட்டை விரைவு ரயில் மீது கல்லெறிந்த நபரை ரயில்வே போலீஸாா் கைதுசெய்தனா்.

கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாா்.

Published On :29 ஜூலை 2026, 2:09 am IST

திருநெல்வேலி-செங்கோட்டை விரைவு ரயில் மீது கல்லெறிந்த நபரை ரயில்வே போலீஸாா் கைதுசெய்தனா்.

செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசையைச் சோ்ந்தவா் துரைப்பாண்டிமனைவி தமிழ்ச்செல்வி (49). இவா், கடந்த 26-ஆம் தேதி திருநெல்வேலி-செங்கோட்டை விரைவு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு பயணம் செய்துள்ளாா்.

வீரவநல்லூா்-கல்லிடைகுறிச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ரயில் மெதுவாகச் சென்றபோது யாரோ எறிந்த சிறிய கல் ஒன்று தமிழ்ெச்சல்வியின் கண்ணுக்கு அருகில் பட்டு காயம் ஏற்பட்டு செங்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா், 27-ஆம் தேதியன்று தென்காசி ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

உதவி ஆய்வாளா் மகாகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மு.சந்தோஷ்குமாா் (19) இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.