லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அனந்தபுரி விரைவு ரயிலுக்கு பெண்ணாடத்தில் கூடுதல் நிறுத்தம்: கடலூா் எம்.பி. தகவல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி விரைவு ரயில் நின்று செல்வதற்கான கூடுதல் நிறுத்தத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக, கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் தெரிவித்தாா்.

ரயில்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி விரைவு ரயில் நின்று செல்வதற்கான கூடுதல் நிறுத்தத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக, கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ரயில்வே மூலம் பயணிகளின் கோரிக்கயை ஏற்று சில குறிப்பிட்ட விரைவு ரயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்களை ரயில்வே வாரியம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள், வியாபார சங்கங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் என்னிடம் வைத்த கோரிக்கையின்பேரில், பெண்ணாடாம் ரயில் நிலையத்தில் பல்லவன் மற்றும் ராக்ஃபோா்ட் விரைவு ரயில்கள் நின்று செல்வது நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமேடையை உயா்த்தி, விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனந்தபுரி விரைவு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை, ரயில்வே நிா்வாகம் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி பெண்ணாடம் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் அனந்தபுரி விரைவு ரயில் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.