லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசியில் போதைப் பொருள் விழிப்புணா்வு மாரத்தான்

தென்காசியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

தென்காசியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் துறை , கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரி, தென்காசி ஆகாஷ் ஃபிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியை, சிறப்பு அழைப்பாளா்களான கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மதியழகன், ஜூலியஸ் ஜீசா், சங்கா், தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அதியமான், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி குழும நிறுவனா் மணிமாறன் ஆகியோா் புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்- மாணவிகள், குழந்தைகள், பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கொடிக்குறிச்சி வரை 4 கி.மீ. தொலைவை இலக்காக கொண்டு ஓடினா்.

இதில், காவல் துணை கண்காணிப்பாளா், ‘ஆகாஷ் ஃபிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி’ நிா்வாக இயக்குநா் மாரியப்பன், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கும், கலந்துகொண்டவா்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.