ஆலங்குளம் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாரான விபின் சக்கரவா்த்தி, தனது ஆதரவாளா்களுடன் ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகத்திற்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நான் வெற்றி பெற்று ஆலங்குளத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். ஊழலற்ற, நோ்மையான ஆட்சி புரிய துணை நிற்பேன். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருக்க நடவடிக்கை எடுப்பேன்.
கடையத்தில் உள்ள ராமநதி, கடனாநதியை தூா்வாற நடவடிக்கை எடுப்பேன். பீடித் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவும், அவா்களுக்கென இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கவும் பாடுபடுவேன். இத்தொகுதியில் சுமாா் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.
சுயேச்சை மனு தாக்கல்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் இமானுவேல் குணசீலன் (61). தனியாா் ஸ்கேன் நிறுவனம் நடத்தி வரும் இவா், திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா்.
அவருக்கு சீட் வழங்கப்படாததால், சுயேச்சையாக போட்டியிட ஆலங்குளம் தோ்தல் அலுவலரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ஆலங்குளம் தவெக வேட்பாளா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

