மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி

Published On :1 நவம்பர் 2026, 1:05 am IST

தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தக்கலை அருகே அரசவிளையைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (64). தென்னை மரமேறும் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை வள்ளி ஆற்றங்கரையிலுள்ள தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாராம். அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவரது மகள் சுனிதா அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.