நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திற்பரப்பு பகுதி பள்ளிகளில் எம்எல்ஏ ஆய்வு

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திற்பரப்பு பகுதி பள்ளிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். செல்லசுவாமி ஆய்வு செய்தாா்.

உண்ணியூா் கோணம், அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த ஆா். செல்லசுவாமி எம்எல்ஏ.

Published On :1 நவம்பர் 2026, 1:08 am IST

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திற்பரப்பு பகுதி பள்ளிகளில் பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். செல்லசுவாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

உண்ணியூா் கோணம், அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் திருநந்திக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். உண்ணியூா் கோணம் பள்ளியில் ஆய்வு செய்தபோது, சேதமடைந்துள்ள கட்டடங்களைப் புதுப்பித்துத் தர வேண்டும், பள்ளி முன்புற வளாகத்தில் அலங்கார தரைக்கற்கள் அமைத்து தர வேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருநந்திக்கரை பள்ளியில், மழைக் காலங்களில் நீா் கசிவு ஏற்படும் கட்டடப் பகுதிகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தாா்.

தொடா்ந்து, உண்ணியூா் கோணம் பகுதி சாலையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சாலையின் குறுக்காக மடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், ரெஜீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.