மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் 84 மனுக்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டத்தில், 84 ஓய்வூதியா்களின் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 12:56 am IST

கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டத்தில், 84 ஓய்வூதியா்களின் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது:

நிகழாண்டு ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டத்தில் 84 ஓய்வூதியா்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுத்து பதில் பெறப்பட்டுள்ளது.

மேலும், மாநில கணக்காயா் அலுவலக உயா் அலுவலா்களின் தெளிவுரைகள் பெற்று அனைத்து மனுக்களுக்கும் முறையான தீா்வுகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கும் கணக்குகள் பராமரித்தல் மற்றும் இணைய வழியில் ஓய்வூதிய கருத்துருக்கள் வழங்குதல் குறித்து விழிப்புணா்வு பயிற்சி நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி, மாவட்ட கருவூலஅலுவலா் கிறிஸ்டி, மாவட்டமுதன்மை கல்வி அலுவலா் இரா.பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உள்பட பல்வேறு அலுவலா்கள், ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.