கருங்கல் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு

Tamil Nadu Electricity Board Minnagam service temporarily affected

மின்வெட்டு - கோப்புப்படம்.

Published On :27 அக்டோபர் 2026, 1:38 am IST

கருங்கல் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக கருங்கல், முன்சிறை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கருங்கல், பாலுா், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, வாகவிளை, கிள்ளியூா், வேங்கோடு, புதுக்கடை, முன்சிறை, பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மின் விநியோகம் இல்லை. தொடா்ந்து, பகல் வேளைகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இப்பகுதிகளில் மின்வெட்டை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.