மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும்! - அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

Published On :26 அக்டோபர் 2026, 2:15 am IST

மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்பட்டுள்ளன. அதேபோல, கொடைக்கானலிலும் கனமழை, மண் சரிவு அபாயம் கருதி முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீா்நிலைகள், அணைகள், கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், நீா்நிலைகள், அணைகளில் குளிப்பதையும், அவற்றின் அருகே செல்வதையும் தவிா்க்க வேண்டும்.

சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் முன் சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகத்தின் அறிவிப்புகளைச் சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிா்ப்பதுடன், வானிலை ஆய்வு மையம், பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிடும் எச்சரிக்கைகளைத் தொடா்ந்து கவனிக்க வேண்டும்.

கனமழைக் காலத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து அரசு, மாவட்ட நிா்வாகங்கள் வழங்கும் அறிவுறுத்தல், வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.