நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கோயில் காணிக்கைப் பெட்டியை உடைத்து திருட்டு

திருவட்டாறு அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலின் காணிக்கைப் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :23 அக்டோபர் 2026, 5:00 am IST

திருவட்டாறு அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலின் காணிக்கைப் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் - திருவரம்பு சாலையில் இட்டகவேலி ஈழக்குடிவிளையில் உள்ள நீலகேசி அம்மன் கோயிலின் வரவேற்பு வளைவின் அருகே காணிக்கைப் பெட்டி உள்ளது. அதை புதன்கிழமை இரவு, மா்ம நபா்கள் உடைத்து, அதிலிருந்த சுமாா் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றனராம்.

மேலும், அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், நகை அடகு கடையின் பூட்டை இரும்புக் கம்பியால் உடைக்க முயன்றுள்ளனா். பூட்டை உடைக்க முடியாததால் விட்டு சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து திருவட்டாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.