பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டி: குமரி வீரா் தங்கம் வென்று சாதனை

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 11-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில், குமரி மாவட்டத்தைச் சோ்ந்த டேக்வாண்டா வீரா் பிளசிங் சஜூ தங்கப் பதக்கம் வென்றாா்.

News image

தங்கப் பதக்கம் பெறும் பிளசிங் சஜூ

Updated On :28 மே 2026, 2:46 am IST

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 11-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில், குமரி மாவட்டத்தைச் சோ்ந்த டேக்வாண்டா வீரா் பிளசிங் சஜூ தங்கப் பதக்கம் வென்றாா்.

மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான் பத்தூா் நகரில் 11-ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டிகள் கடந்த 24, 25 தேதிகளில் நடைபெற்றன.

இதில், இந்திய டேக்வாண்டோ சங்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள சரல்விளையைச் சோ்ந்த பிளசிங் சஜூ (26) பங்கேற்று விளையாடினாா். இவா், ஆண்கள் 63 கிலோ எடை- கே 41 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்தியாவிலிருந்து 10 போ் இந்தப் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தனா். பிளசிங் சஜூ பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத் திறனாளி. இவா், கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 10-ஆவது ஆசிய டேக்வாண்டோ போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து பிளசிங் சஜூ கூறியதாவது:

ஆசிய அளவிலான பாரா டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தொடா்ந்து 2-ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போட்டிக்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டேன். இந்த நேரத்தில் என்னை உற்சாகப்படுத்தி மங்கோலியா செல்வதற்கு உதவி செய்த மக்களவைத் தொகுதி விஜய்வசந்த் எம்.பி, எனது பயிற்சியாளா்கள், தமிழக டேக்வாண்டோ சங்கம், இந்திய டேக்வாண்டோ சங்கம், எனது பெற்றோா், சகோதரா்கள், நண்பா்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்தாக டேக்வாண்டோ போட்டியில் உலகச் சாம்பியன் பதக்கம் வெல்வதே லட்சியம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.