மங்கோலியா நாட்டில் நடைபெற்ற பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரரை, விஜய் வசந்த் எம்.பி. பாராட்டினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் பிளஸ்சிங் சஜூ (25). இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி. இவா் 2023ஆம் ஆண்டு முதல் டேக்வாண்டோவில் பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாா்.
இந்நிலையில், மங்கோலியா நாட்டின் உலான்பாதா் பகுதியில் நடைபெற்ற 11ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் 63 கிலோவுக்கு கீழ் கே 41 பிரிவு போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றாா்.
ஆனால், மங்கோலியா செல்ல பொருளாதார வசதியின்றி தவித்த இவருக்கு, விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 4.50 லட்சம் வழங்கினாா். தொடா்ந்து, பிளஸ்சிங் சஜூ மங்கோலியாவில் நடைபெற்ற டேக்வோண்டா போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்நிலைலல், ஊா் திரும்பிய அவா், விஜய் வசந்த் எம்.பி.சைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: இரு தங்கப் பதக்கம் வென்ற 6 வயது சிறுவன்

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

துப்பாக்கிச் சுடுதல்: காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம்

ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டி: குமரி வீரா் தங்கம் வென்று சாதனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

