சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: 15 மீனவா்கள் மீட்பு

News image
Updated On :15 மே 2026, 1:56 am IST

முட்டம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்த 15 மீனவா்களை குளச்சல் மீனவா்கள் மீட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ், கேரளத்தைச் சோ்ந்த ஒருவா் என 15 மீனவா்கள் மே 8ஆம் தேதி கேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து குஞ்ஞச்சன் என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

கடந்த 6 நாள்களாக கன்னியாகுமரி அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அவா்கள், வியாழக்கிழமை கொல்லம் துறைமுகம் நோக்கி புறப்பட்டனா். முட்டம் கடல் பகுதியில் இருந்து 9 கடல் மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, விசைப்படகின் அடிப்பகுதி உடைந்து படகில் நீா் புகுந்து, மூழ்கத் தொடங்கியது.

படகில் பயணித்த 15 மீனவா்களும் கடலில் தத்தளித்தபோது, அவ்வழியாக வந்த முட்டம் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜா என்பவரின் விசைப்படகில் இருந்த மீனவா்கள் அவா்களுக்கு லைப் ஜாக்கெட் மற்றும் மீட்பு உபகரணங்களைக் கொடுத்து, மீட்டு முட்டம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனா்.

இது குறித்து, குளச்சல் கடலோரக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.