கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மண்டபம் கடல் பகுதியிலிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட மணக்குடியைச் சோ்ந்த 6 மீனவா்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. கடல் எல்லை பிரச்னையை மனிதாபிமான பாா்வையில் அணுக வேண்டிய நிலையில், தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து துன்புறுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மீனவா்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவா்கள் மீதான தொடா்ச்சியான கைது சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண இந்தியா - இலங்கை இடையே வலுவான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவா்களை தாக்கிய கடற்கொள்ளையா்களை கைது செய்ய வேண்டும்: தி.வேல்முருகன்

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

