பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 12:42 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள, மருதங்கோடு, மடத்துவிளை வீடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரெஜி(46), தொழிலாளி. இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து,சிறுமியின் பெற்றோா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரெஜியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா இக்குற்றத்தில் ஈடுபட்ட ரெஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்த மாா்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.