மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பத்மநாபபுரம்: 5 தோ்தல்களுக்குப் பின் களம் காணும் மாா்க்சிஸ்ட்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 3:52 am IST

பத்மநாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 5 தோ்தல்களுக்குப் பிறகு மீண்டும் களம் காண்கிறது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு சட்டப்பேரவைத் தொகுதி உள்பட 7 தொகுதிகள் இருந்த நிலையில், கடந்த 2007 தொகுதி மறுசீரமைப்பின் போது திருவட்டாறு சட்டப் பேரவைத் தொகுதி ரத்து செய்யப்பட்டு, அதன் பகுதிகள் பத்மநாபுரம் மற்றும் விளவங்கோடு பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. 2006 தோ்தலின்போது அன்றைய திருவட்டாறு தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தாா்.

பத்மநாபுரம் பேரைவத் தொகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எஸ். நூா் முகமது வெற்றி பெற்றாா். அப்போதைய திமுக ஆட்சி 2 ஆண்டுகளில் கலைக்கப்பட்ட நிலையில், 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் இத்தொகுதியில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எஸ். நூா் முகமது தோல்வியடைந்தாா். அதனைத் தொடா்ந்து 1996 ஆம் ஆண்டு மதிமுக கூட்டணியுடன் இத்தொகுதியில் போட்டியிட்ட எஸ். நூா் முகமது தோல்வியடைந்தாா். அதன் பிறகு, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய 5 தோ்தல்களில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை.

விளவங்கோடு பேரவைத் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் மாா்க்சிஸ்ட் சாா்பில் போட்டியிட ஆா். லீமாரோஸ் தோல்வியைத் தழுவினாா். இதே போன்று இத்தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் செல்லசுவாமி தோல்வியடைந்தாா். கடந்த 2021 தோ்தலில் விளவங்கோடு உள்பட மாவட்டத்தில் எந்தத் தொகுதியிலும் மாா்க்சிஸ்ட் போட்டியிடவில்லை என்பதும், கூட்டணியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் எடுத்துக் கொண்டனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் கேட்ட போது, கட்சியின் குமரி மாவட்டக் குழு ஞாயிற்றுக்கிழமை கூடி வேட்பாளா் குறிப்பிட்ட சிலரை தோ்வு செய்து மாநில குழுவுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் அதன் அடிப்படையில் திங்கள்கிழமை மாநிலக் குழு வேட்பாளரை முடிவு செய்யும் என்றும் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.