மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மடிக்கணினி வழங்கியதில் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

News image

நாகா்கோவில் அருகே ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரத்தை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :30 மார்ச் 2026, 3:00 am IST

கல்லூரி மாணவா்களுக்கு மடிகணினி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது; அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் செய்தாா். நாகா்கோவில் அருகே ஆரல்வாய்மொழி சந்திப்பில் வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில்தான் முதன்முதலில் மடிக்கணினி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா். மாநிலம் முழுவதும் எங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் 52.30 லட்சம் மாணவா்களுக்கு மடிகணினி வழங்கினோம்; இதற்காக ரூ. 7,350 கோடி நிதியை ஒதுக்கினோம்.

ஆனால், இன்றைக்கு திமுக அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட காரணத்தால், நான்கரை ஆண்டுகளுக்கு பின்பு அவசரஅவசரமாக கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்குகிறது. அதுவும் தரமில்லாத மடிகணினி என்று கேள்விப்பட்டேன். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைத்து ஊழல் நடைபெற்றிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.

திமுக ஆட்சியில் மூடப்பட்ட அம்மா ‘மினி கிளினிக்’ மீண்டும் திறக்கப்படும். நாட்டிலேயே தேசிய விருதுகள் அதிகம் பெற்ற ஒரே அரசு அதிமுக அரசுதான். உள்ளாட்சித் துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளை பெற்றோம். கரோனா காலத்தில் ஓராண்டுக்கு நியாயவிலைக் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கினோம். தைப்பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2,500 கொடுத்தோம்.

கரோனா காலத்தின்போது அரசுக்கு ஒரு ரூபாய் கூட வரியில்லாத நிலையிலும் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். ஆனால், திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கிறது. ‘கலெக்க்ஷன், கமிஷன், கரப்ஷன்’ என்ற மூன்றையும் தெளிவாகச் செய்கிறாா்கள். பல வரிகள் உயா்த்தப்பட்டுவிட்டன; குப்பைக்குக்கூட வரி விதித்த ஒரே அரசு திமுக அரசுதான்.

இன்றைக்கு ஸ்டாலின் எப்படியாவது மகன் உதயநிதியை முதல்வா் நாற்காலியில் அமர வைத்துவிட வேண்டும் என பாடுபட்டு கொண்டிருக்கிறாா். ஸ்டாலினே உங்கள் கனவு பலிக்காது, அது பகல் கனவாகவே இருக்கும். அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தோ்தலாகத்தான் இத்தோ்தல் அமையும்.

சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 2021 வரை தமிழகத்தில் பல கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. 2021 வரை 73 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 4 .85 லட்சம் கோடிதான். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ. 5 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. நிா்வாகத் திறமையற்ற முதல்வா் தமிழகத்தை ஆள்கிறாா். திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்கள், மூதாட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம், கிள்ளியூா் தொகுதி தமாக வேட்பாளா் நிவின்சைமன், முன்னாள் அமைச்சா்கள் கே.டி.பச்சைமால், நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயாகண்ணன், ஸ்ரீலிஜா, கோபாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.