செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இங்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை காலை தங்களது அதிகாரபூா்வ மின்னஞ்சலை பரிசோதித்தபோது, நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டல் செய்தி வந்திருந்தது.

இது குறித்த தகவலின்பேரில், கோட்டாறு போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். இதில் அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

நீதிமன்றத்துக்கு கடந்த மே மாதம் இதே போல் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.