இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

தடைகாலம் நிறைவு: களைகட்டியது சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம்

News image

முதல் நாளில் பிடித்து வரப்பட்ட பாறை மீன்கள்.

Updated On :16 ஜூன் 2026, 2:37 am IST

மீன்பிடித் தடைக்காலம் நிறைவுற்று மீனவா்கள் முதல்நாள் கடலுக்குச் சென்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தி விசைப்படகுகளில் பல்வேறு ரக மீன்கள் பிடித்து வரப்பட்டன.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிந்ததையொட்டி முதல் நாளான திங்கள்கிழமை அதிகாலை 298 விசைப்படகுகளில் மீனவா்கள் தொழிலுக்குச் சென்றனா். இந்தப் படகுகள் மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பின.

விசைப்படகுகளில் பாறை, கணவா, அயலை, நெடுவா, சீலா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடித்து வரப்பட்டன. இந்த மீன்களை ஏலத்தில் எடுப்பதற்காக உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள், பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளா்கள் என ஆயிரக்கணக்கானோா் துறைமுகத்தில் குவிந்தனா். இதனால் துறைமுக வளாகம் களைகட்டியது. தடைகாலம் முடிந்து முதல் நாள் என்பதால் வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனா். இதனால் மீன்கள் விலை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. ஒரு கூடை பாறை மீன் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

எஸ்.பி.ஆய்வு: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தமுள்ள 370 விசைப்படகுகளில் அதிகமாக வடமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்கள் முறையான அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை வைத்துள்ளனரா என மாவட்ட எஸ்.பி. இரா. ஸ்டாலின் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.