குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :16 ஜூன் 2026, 12:10 am IST

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம், எதிரில் வந்த காரில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் மகன் சுரேஷ்குமாா் (26). கேட்டரிங் தொழில் செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை அழகிய மண்டபம் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவுக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்தபோது, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காா்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த காா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவா் மீது லாரி ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.