நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பேச்சிப்பாறை அருகே யானையால் விளை நில கொட்டகை சேதம்

பேச்சிப்பாறை அருகே யானையால் விளை நில கொட்டகை சேதம்

News image

யானையால் சேதப்படுத்தப்பட்ட கொட்டகை.

Updated On :13 ஜூன் 2026, 12:26 am IST

பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலையில் பழங்குடி தொழிலாளியின் விளை நிலத்தில் காட்டு யானை புகுந்து அங்கிருந்த கொட்டகையை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

குமரி மாவட்ட வனப் பகுதிகளில் பிற இடங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட அரிக்கொம்பன், புல்லட் ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகிய 3 யானைகள் விடப்பட்டுள்ளன. இந்த யானைகள் மலையடிவாரத்தையொட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பேச்சிப்பாறை அருகே கோதையாறு கொடுத்துறை மலையில் கொச்சு ராமன் காணி என்பவா் தனது விளை நிலத்தில் அமைத்திருந்த கொட்டகையை யானை சேதப்படுத்தியதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களை தின்றுள்ளது.

அவா் வெள்ளிக்கிழமை காலையில் தனது விளை நிலத்துக்குச் சென்றபோது யானையின் அட்டகாசம் செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.