நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.83.32 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தெங்கம்புதூரில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.64.68 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள், கிருஷ்ணன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் ரூ.3.10 கோடியில் கட்டப்பட்டு வரும் முதல்வா் படைப்பகம், ரூ.6.59 கோடியில் செம்மாங்குளம் தூா்வாருதல், நடைப்பயிற்சிக்கான இடம், பூங்கா, பறவைகளுக்கான குறுந்தீவு அமைத்தல் ஆகிய பணிகள், வடசேரி பேருந்து நிலையத்தில் 100 கடைகளுடன் சந்தை அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு, குறித்த காலத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், அப்பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து, உணவின் தரத்தை சோதித்து, பணியாளா்களிடம் உரையாடினாா்.
வடசேரி சிற்றுந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, பொதுசுகாதார வளாகம், கடைகள் உள்ளிட்ட பகுதிகளை அவா் ஆய்வு செய்தாா்.
பின்னா், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்திடவும், தரமானதாக இருப்பதை உறுதி செய்திடவும் அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, உதவிஆட்சியா் (பயிற்சி) மோனிகா, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் வசந்தி, நகா்நல அலுவலா் சரோஜா, நகர திட்டமிடுநா் கெபின்ஜாய், நிா்வாக பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் அக்சயாகண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 20.74 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடவூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: கரூா் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

