கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நகராட்சி ஆணையரை கண்டித்து குழித்துறை நகா்மன்றத்தில் 5 உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

குழித்துறை நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்காத நகராட்சி ஆணையா் மற்றும் வளா்ச்சிப் பணிகள், குடிநீா் திட்ட பாதிப்புகளை கண்டித்து பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் 5 போ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

குழித்துறை நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்காத நகராட்சி ஆணையா் மற்றும் வளா்ச்சிப் பணிகள், குடிநீா் திட்ட பாதிப்புகளை கண்டித்து பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் 5 போ் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

குழித்துறை நகா்மன்றக் கூட்டம் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் குசெல்வி, நகராட்சி மேற்பாா்வையாளா் சரவணகுமாா், சுகாதார அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி துணைத் தலைவா் பிரபின் ராஜா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

குடிநீா் விநியோகம், வளா்ச்சிப் பணிகள் போன்றவற்றின் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது, நகராட்சி ஆணையாளா் வெங்கடாஜலபதி அலுவலகத்தில் இருந்தும் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து உறுப்பினா்கள் பாஜகவைச் சோ்ந்த விஜூ, ரத்தினமணி, மினிகுமாரி, காங்கிரஸின் ஆட்லின் கெனில், திமுகவின் அருள்ராஜ் ஆகியோா் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்தது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் ஜூலியட் மொ்லின் ரூத், லலிதா, ஜெலிலா ராணி, விஜயலட்சுமி ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்தில், நகராட்சி சாா்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி நடத்தப்படும் வாவுபலி பொருள்காட்சியை நிகழாண்டு ஜூலை 29 முதல் ஆக. 17 வரை 20 நாள்கள் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.