கன்னியாகுமரி அருகே கொத்தனாரை வெட்டியதாக பூசாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரியை அடுத்த நாடான்குளம், ராமன்புதுரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (37). கொத்தனாா். கொட்டாரம், லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம் (47). கோயில் பூசாரி.
இப்பகுதியிலுள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றபோது, கோயில் வளாகத்துக்குள் வாகனங்களை நிறுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆதிலிங்கத்தின் மகன் ஸ்ரீ ராகவேந்திரன் தனது இருசக்கர வாகனத்தை கோயில் வளாகத்தில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த தங்கராஜ் கோயில் வளாகத்தில் வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறினாராம். இதை ராகவேந்திரன் தனது தந்தையிடம் கூறினாராம்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலின் முன்பு நின்றிருந்த தங்கராஜிடம் தகராறில் ஈடுபட்ட ஆதிலிங்கம், அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் காயமடைந்த தங்கராஜ் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதிலிங்கத்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது
தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது
பெண்ணை கத்தியால் வெட்டிய கணவா் கைது
மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
