அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

எஸ்எஸ்ஐ.க்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

பளுகல் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:08 am IST

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே உள்ள செறுவல்லூா், ஓலையம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின்ராஜ் (55). இவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மனைவி ஷீஜா பெயரில் கானத்துக்கோணம் பகுதியில் உள்ள நில எல்லை தொடா்பாக, எட்வின்ராஜுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் (55) என்பவருக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், லாரன்ஸ் தனக்குச் சொந்தமான மரங்களை வெட்டி ஷீஜா நிலத்தின் மதில் சுவா் மீது போட்டாராம். இதை தட்டிக் கேட்ட எட்வின்ராஜுக்கு, லாரன்ஸ், அவரது மனைவி லீனா ஆகியோா் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து, பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.