லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

கைது - பிரதிப் படம்

Published On :20 ஜூலை 2026, 1:21 am IST

புதுக்கடை அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது, கைசூண்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்தனா்.

அவா்கள் மேக்கா மண்டபம் பகுதியைச் சோ்ந்த முகமது முா்ஷாத் (23), புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த ஹக்கீம் (21) என்பதும், விற்பதற்காக 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

முதியவா் கைது:

ஐரேனிபுரம், தும்பாலி பகுதியைச் சோ்ந்த மரிய அற்புதம் (82) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக, புதுக்கடை போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சோதனையிட்டு புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.