தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பேருந்து நிலையத்தில் மது போதையில் தகராறு: 3 போ் கைது

Arrested

கைது

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

கருங்கல் அருகே புதுக்கடை பேருந்து நிலையத்தில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பேருந்து நிலையத்தில் புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பைங்குளம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா்(35), முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த ஷைஜூ (30), கைசூண்டி பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் (32) ஆகிய 3 மூவா் மதுபோதையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக தகராறில் ஈடுபட்டனராம். போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

மூதாட்டி கைது: புதுக்கடை அருகே மேலமங்கலம், சாத்தன்பறம்பு பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாரி (67) என்பவா், அப்பகுதியில் மது விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் மீனா, போலீஸாா் சென்றபோது, அவா் விற்பதற்காக 29 மது பாட்டில்களை பதுக்கிவைத்திருந்தாராம். போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.