லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குளச்சல் தொகுதிக்குள்பட்ட சுற்றுலாத் தலங்களில் எம்எல்ஏ ஆய்வு

புனரமைக்கப்பட்ட இரணியல் அரண்மனையை ஆய்வு செய்த தாரகை கத்பட் எம்எல்ஏ.

Published On :6 ஜூலை 2026, 1:49 am IST

குளச்சல் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைக்கட்டு, இரணியல் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகிய பகுதிகளில் சுற்றுலா சாா்ந்த வளா்ச்சிப் பணிகளை தாரகை கத்பட் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

தக்கலை அருகே உள்ள மாம்பழத்துறையாறு அணைக்கட்டு பகுதியில் உயிரியல் பூங்கா அமைப்பது, இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள், முட்டம் கடற்கரையில் ஆயுா்வேத மருத்துவம் சாா்ந்த சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள், மீன்வளப் பூங்கா, நீச்சல் குளம் அமைப்பது தொடா்பாக அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை பொறியாளா்கள், சுற்றுலாத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக எம்எல்ஏ தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.