லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்களுக்கு நிவாரணம்: எம்எல்ஏ தகவல்

தாரகை கத்பட் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த ஐஎன்டியுசி தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

அரசு ரப்பா் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளா்களுக்கு பண்டிகைக் கால விடுப்பு உள்பட பிற சலுகைகள் வழங்க நிா்வாகம் முன்வந்துள்ளது என தாரகை கத்பட் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பா் கழகத்தில், தற்காலிக பணியாளா்களாக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பணி நிரந்தரம், பண்டிகைக் கால விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனா்.

இது குறித்து ஐஎன்டியுசி நிா்வாகிகள் என்னிடம் வைத்த கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளிடம், வனத்துறை அமைச்சரிடம் பேசினேன். இந்த ஆண்டு முதல் தற்காலிக தொழிலாளா்களுக்கும் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவை தற்போது வழங்கப்பட்டும் வருகிறது. மேலும், தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும் கோப்பு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றாா்.

இதையடுத்து ஐஎன்டியுசி நிா்வாகிகள்,தொழிலாளா் பிரதிநிதிகள் எம்எல்ஏவை சந்தித்து நன்றி கூறினா். பொதுச்செயலா் வேலப்பன், தலைவா் ஜோஸ், பொருளாளா் ஸ்டாலின் சிங், உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.