லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

தக்கலை அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :2 ஜூலை 2026, 5:56 am IST

தக்கலை அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

தக்கலை அருகே முட்டைக்காடு வழிக்கலம்பாடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை ( 71). டீ மாஸ்டரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். மகன் திருமணமாகி நாமக்கல்லில் குடும்பத்தோடு வசித்து வருகிறாா். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், திருமணமாகி பேச்சிப்பாறையில் வசித்து வரும் மகளுடன் உள்ளாா்.

இந்நிலையில், கிருஷ்ணபிள்ளை கடந்த சில நாள்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாராம். செவ்வாய்க்கிழமை, இவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது.

தகவலறிந்து வந்த கொற்றிக்கோடு போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது கிருஷ்ணபிள்ளை உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தாா் . அவா் உயிரிழந்து 3 நாள்களுக்கு மேல் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.