லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அழுகிய நிலையில் மீனவா் சடலம் மீட்பு

புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் அழுகிய நிலையில் மீனவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் அழுகிய நிலையில் மீனவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் வா்க்கீஸ் மகன் ரூபன் (41). இவா் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளாா்.

தனியாக வசித்து வந்த ரூபன் வீட்டிலிருந்து சனிக்கிழமை துா்நாற்றம் வீசியதாம். இதுகுறித்து தகவலறிந்து புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் ரூபன் சடலமாக காணப்பட்டாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.