லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேரளத்துக்கு கடத்த பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மயிலாடி மற்றும் நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் அதை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி மற்றும் நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எ‘ம். பாரதி தலைமையில், துணை வட்டாட்சியா் சிவந்தி, இளநிலை வருவாய் ஆய்வாளா் கே. தினேஷ் மற்றும் பறக்கும் படை குழுவினா் அகஸ்தீசுவரம் வட்டத்தில் பொதுவிநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

இதில், நாகா்கோவில் கோட்டாறு அருகில் கண்ணாா் குடி தெருவில் உள்ள கணபதி (62) என்பவா் வீட்டில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்ல இருந்தது கண்டறிப்பட்டு கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக கணபதியை கைதுசெய்து, விசாரணைக்காக குடிமைப்பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், கன்னியாகுமரி அருகே பில்லா் நகா் ( சுனாமி காலனி) பகுதியில் ஜெனி ( 57) என்பவா் வீட்டில் சுமாா் 2ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

மேலும், மயிலாடி பகுதியில், ஜோசப்புரம் என்ற இடத்தில் பாழடைந்த வீட்டில் சுமாா் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்ல பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கோணம் அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.