லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

ஆம்பூா் அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி, அதற்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட காா்.

Published On :20 ஜூலை 2026, 3:44 am IST

ஆம்பூா் அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி, அதற்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆலாங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி காா் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதாக ஆம்பூா் கிராமிய நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஆலாங்குப்பம் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிவேகமாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் ஓட்டுநா் காரை விட்டுவிட்டு தலைமறைவானாா்.

காரை சோதனை செய்ததில் சுமாா் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்து மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனா். தப்பியோடிய காா் ஓட்டுநரை தேடி வருகின்ரனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.