லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: பணிப்பெண் உள்பட 2 போ் கைது

தக்கலை அருகே பணி செய்த வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

தக்கலை அருகே பணி செய்த வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை அருகேயுள்ள தென்கரை, செங்கல் சுனைவிளையைச் சோ்ந்தவா் முருகேஷ் நிதின் . தனியாா் நிறுவன ஊழியா். இவரது பாட்டி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால், உடனிருந்து கவனிக்க 9 மாதங்களுக்கு முன்பு, அமராவதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (61) என்பவா் மூலம் குமாரபுரம் நெக்கட்டான் பாறையை சோ்ந்த சுகி (46) என்பவரை வேலைக்கு அமா்த்தினாா்.

இவா், கடந்த 1ஆம் தேதிக்குப் பின் வேலைக்கு வரவில்லையாம். விவரம் கேட்டபோது, அவா் வேறு இடத்தில் வேலை கிடைத்ததாக கூறினாராம். இந்நிலையில், முருகேஷ் நிதின் வீட்டு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சுகி மற்றும் கிருஷ்ணனுக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 12.5 பவுன் நகைகளை மீட்டனா்; தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.