நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: லாரி ஓட்டுநா் கைது

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :25 செப்டம்பர் 2026, 3:29 am IST

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியை சோ்ந்த சிவன் மனைவி மஞ்சுளா (32). இவா், கடந்த 21ஆம் தேதி மாலையில் தனது இரு மகள்கள் (6, 8 வயது), மகன் சிவபிரதீப்(4), ஆகியோருடன் ஊரிலிருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை நோக்கி மொபெட்டில் வந்துள்ளாா்.

பொன்னாக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரியும், அவரது மொபட்டும் மோதிக்கொண்டனவாம். இதில், சிவபிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மஞ்சுளாவும், அவரது மகள்களும் காயமடைந்தனா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், லாரி ஓட்டுநரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை, வேத கோயில் தெருவைச் சோ்ந்த மோசஸ்(41) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.